Showing posts with label கவிதை வரிகள். Show all posts
Showing posts with label கவிதை வரிகள். Show all posts

Monday 28 January 2013

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…!!
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க

நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!

Saturday 10 November 2012

அப்பாவுக்கு மகள் எழுதுவது


>கண்மூடி உன் கைகளில்
 கிடந்த போது...
 எனக்கான கனவுகளை
 நீ சுமந்தாய்...! 


>ஆறடி உயரத்தை
 அரையடியாய் குறுக்கி
 அம்பாரி நான் ஏற..
 ஆனந்தமாய் நீ ரசித்தாய்...!



>'அ' எழுதியதற்கே...
 'அறிவாளி என் மகள்' என
 ஆனந்த கூத்தாடினாய்...!


>என் ஆசைகளுக்கு
 அஸ்திவாரமிட்டதில்
 உன் தேவையை
 நீ மறந்தாய்...!


>இரவும் பகலும்
 எனையே நினைத்தாய்...!
 உன் வியர்வையை சிந்தி
 உணவை தந்தாய்...!


>கல்யாணம் செய்துவித்து
 கடனாளியாகி நின்றாய்...!
 நீ கொடுத்த கல்வியால்
 பணம் காய்க்கும் மரமாய் நான்...!


>வயோதிகமும் வறுமையும்
 உன்னை வாட்ட...
 ஒரு நூறு உனக்கு கொடுக்க
 எனக்கோ உரிமை இல்லை..!


>உயர் கொடுத்த உத்தமனே
 என்னை மகளாய்
 பெற்றதனால்
 என்ன சுகம் கண்டாய் நீ?

--Thilagavathy 

::::Courtesy::::
>Varamalar-Dinamalar<

Popular Posts