Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Thursday 26 September 2013

படித்ததில் பிடித்தது-நாய்க்குட்டிகள் விற்பனைக்கு


நாய்க் குட்டிகள் விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடைக் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார்
அதன் உரிமையாளர்.

அந்தப் பலகை
குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர்.

அதன்படியே ஒரு சிறுவன், கடையின் முன் வந்து நின்றான்.
"நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான்.

"முப்பது டாலரிலிருந்து ஐம்பது டாலர் வரை" - கடைக்காரர் பதில் சொன்னார்.

அந்தக் குட்டிப் பையன் தனது பேண்ட் பைக்குள் கைவிட்டுக் கொஞ்சம் சில்லறைகளை எடுத்தான்.
"எங்கிட்ட 2.37 டாலர் இருக்கு. நான் நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?" என்று கேட்டான்.

கடை உரிமையாளர் புன்னகைத்து, உள் பக்கம் திரும்பி விசிலடித்தார். நாய்க் கூண்டிலிருந்து ஒரு பெண் இறங்கி நடைபாதை வழியாக ஓடி வந்தாள்.
அவளுக்குப் பின்னால், முடியாலான பந்துகளைப் போல ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகள் ஓடிவந்தன.
ஒரு குட்டி மட்டும் மிகவும் பின்தங்கி மெதுவாக வந்தது.
பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த அந்தக் குட்டியை உடனே கவனித்த சிறுவன்,
"என்னாச்சு அதுக்கு?" என்று கேட்டான்.

அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குப் பிற்பகுதி சரியாக வளர்ச்சி யடையவில்லை. எனவே எப்போதும் நொண்டித்தான் நடக்கும், முடமாகத் தான் இருக்கும் என்று கூறிவிட்டதாக விளக்கினார் கடைக்காரர்.

சிறுவனின் முகத்தில் ஆர்வம்.
"இந்தக் குட்டிதான் எனக்கு வேணும்."
"அப்படின்னா நீ அதுக்குக் காசு கொடுக்க வேணாம். நான் அதை உனக்கு இலவசமாகவே தர்றேன்" என்றார் கடைக்காரர்.

அந்தக் குட்டிப் பையனின் முகத்தில் இப்போது சிறு வருத்தம்.
கடைக்காரரின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து விரல் நீட்டிச் சொன்னான்.
"நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாகக் கொடுக்க வேணாம். மற்ற நாய்க் குட்டிகளைப் போலவே இதுவும் விலை கொடுத்து வாங்கத் தகுதியானது தான்.
நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத் தொகையையும் கொடுக்கிறேன்.
ஆனா, இப்போ எங்கிட்ட 2.37 டாலர்தான் இருக்கு. பாக்கித் தொகையை மாசாமாசம் 50 சென்ட்டா கொடுத்துக் கழிச்சிடறேன்."

ஆனாலும் கடைக்காரர் விடவில்லை.
"பையா... இந்த நாய்க் குட்டியால உனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.
இதால மற்ற நாய்க்குட்டிகளைப் போல ஓடமுடியாது...
குதிக்க முடியாது... உன்னோட விளையாட முடியாது."

உடனே, அந்தப் பையன் குனிந்து தனது இடது கால் பேண்டை உயர்த்தினான்.
வளைந்து, முடமாகிப் போயிருந்த அக்காலில் ஓர் உலோகப் பட்டை மாட்டப்பட்டிருந்தது.
இப்போது அவன் கடைக்காரரை நிமிர்ந்து பார்த்துச் கொன்னான்.
"என்னாலும் தான் ஓட முடியாது... குதிக்க முடியாது. இந்தக் குட்டி நாயின் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத் தேவை!"

வாசிக்க கண் கலங்குது !!! பிடிச்சா பகிருங்க !

Monday 22 October 2012

படித்ததில் பிடித்தது



  • இறைவன் கையில் நான் ஒரு பென்சில் மட்டுமே.எழுதுவதெல்லாம் அந்த ஆண்டவன்தான். இந்தப் பென்சிலுக்கு எந்த பெருமையும் இல்லை

                       -------அன்னை தெரசா
  • உலகில் ஒருவனது அறிவின் நல் அடையாளம் அவன் உள்ளத்தில் உருவாகும் கேள்விகளே

                                  -வால்டேர்
  • சிந்தனை மரத்தில்தான் கேள்விப்பூக்கள் சிரிக்கின்றன.

  • உலகில் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை காண முடியாது

                                 --------புத்தர்
  • முட்டாளுக்கு எதுவுமே தெரியாது.                                    அரைகுறை அறிவாளிக்கு அனைத்தும் தவறாகவே புரியும்.

  • வாழ்க்கை நதிக்கு சுகமும் சோகமும்தான் இரு கரைகள்
  • முள்ளை விதைப்பது மனமே                                  மலரைச் சொரிவதும் மனமே
  • கண்ணுக்கு அழகு எதுவரை..கையில் கிடைக்கும் நாள்வரை
  • மதியால் விதியை ஆராய்ச்சி செய்யலாம். ஆனால் ஆட்சி செய்ய  முடியாது   -------------------------------கண்ணதாசன்
  • நினைவின்றி மனம் போடும் முடிச்சுகள் அவிழ்க்க முடியாதவை
     காலியாக இரு அப்போதுதான் நீ நிரம்பி இருப்பாய்

     தூங்கையிலே விடுகிற மூச்சு சுழிமாறிப்போனாலும் போச்சு

  • ஒவ்வொரு ஆசைக்குப் பின்னாலும் ஒரு துன்பம் தொடர்கிறது
     எளிமையாக வாழ்பவருக்கு சிக்கனமே சீதனம்

     வாழ்வே தவமானால் நிறைவே வரமாகும்

  • மௌனத்தில்தான் மனம் பேசும்விலங்குக்கும் பறவைக்கும் சிரிக்கத்தெரியாது..ஆனால் அவை அன்றாடம் அழுவது கிடையாது
  • சின்னஞ்சிறு விஷயங்களே சம்பூரணத்தை உருவாக்குகின்றன சம்பூரணம் சின்னஞ்சிறு விஷயமில்லை
  • மனிதரின் மனம்போல் மண்ணில் வாழ்க்கை 
  • நிறைய வேலை செய்யாதீர்கள்-ஆனால்                                                       நிறைவாக வேலை செய்யுங்கள்.                              குறைவாக வேலை செய்யுங்கள்-ஆனால்              குறையில்லாமல் வேலை செய்யுங்கள்.
  • வாழ்வே தவம்..வலிகளே வரம்.
  • சிறைப்படுத்தும் கதவுதான்.விடுதலையாக்கும் வாசல்                                நீ கைதியா? சுதந்திரமானவனா?                                                                      கதவின் எந்த பக்கம்                                                                                               நிற்பதென்ற தீர்ப்பை                                                                                                         நீ அல்லவா எழுத வேண்டும்.
  • வாழ்க்கையின் வளர்ச்சிக்குத் தேவை.ஒழுக்கம் பற்றிய பாடங்கள் அல்ல. தடுமாற்றம் இல்லாத கவனம், முழுமையான விழிப்புணர்வு. 
  • எந்த செயலுமே சுலபமாவதற்கு முன்  கடினமாக இருக்கிறது.
  • முயலும் வரை முயல்வதல்ல முயற்சி.                                                    முடியும் வரை முயல்வதே வெற்றி.
  • புதிய செயல்களை செய்யத் துணியும் போது                                              இந்த உலகம் முதலில் உன்னை                                                                      ஏளனம் செய்யும்.பின்பு உன்னை எதிர்த்து  நிற்கும்.                              அதன் பின் உன் வெற்றிகளைக்                                                                             கண்டு உன்னைப் பின்பற்றும்.

Popular Posts