Thursday 14 May 2015

FB Posts

Thursday 23 April 2015

ஆயிரத்தில் நானும் ஒருவன் (Share your views)

எனக்கு கிடைத்தால் போதுமென்று(!)
கூட்ட நெரிசலில் பேருந்தின் 
இருக்கை நோக்கியோடும் பல 
ஆயிரம் வீரர்களில் நானுமொருவன்..!




















வயதான பலர் தள்ளாடும் நிலை 
கண்டும் எழுந்து இடம் விடாதே! 
என்று  சுயநல முடிவெடுக்கும்-பல 
நல்ல(!) மனிதர்களில் நானுமொருவன்..!
  
கண்முன்னே நடக்கும் அநியாயங்கள்
நல்லவேளை எனக்காக வில்லையென  
காதிருந்தும் செவிடனாக்கும் கருவிமாட்டும்
கனிவுள்ள(!) மனிதர்களில் நானுமொருவன்..!

கேரளாயென்ன கர்நாடகா யென்ன 
தண்ணீர்த்தர யார் மறுத்தால் 
தனக்கென்ன என்று எண்ணும் 
பகுத்தறிவாளர்கள்(!) பலருள் நானுமொருவன்..!

இல்லாதவருக்கு ஒரு ரூபாய் கொடுக்க 
ஓராயிரம் முறை யோசித்து-எல்லாம் 
இருக்கும் காதலிக்கு இலட்சங்கள் 
பரிசளிக்கும் ரோமியோ(!)களில் நானுமொருவன்..! 

- Anbuselvam @ Saran 

Friday 6 February 2015

Farewell day(நம் கல்லூரி கால நட்பு) Feelings of India Day

எனக்கென்று நண்பர்கள் கிடைப்பார்கள்
என்ற கனவுடன் நுழைந்தேன்
கல்லூரிக்குள்...!

முதல் நாள் இங்கே உட்காரு என்று சொல்லி
முதல் நட்பு கிடைக்க, நாளடைவில்
எனக்கில்லா நண்பர் கூட்டம் இல்லை
இந்த கல்லுரியில்...!

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்
என்று எங்கோ கஷ்டப்படும் நண்பனின்
கவலையைப் போக்க போராடியும்,
என் நண்பன் வீட்டு விசேசங்களுக்கு சென்று
அவர்களின் வீட்டுப் பிள்ளைதான் நாங்களும்
என்று கவனித்த அவர்களின் பாசத்தையும்
இன்றும் எங்களது நெஞ்சம் மறக்கவில்லை...!

என் முகம் வாடிக்கிடக்க,
நான் இருக்கிறேன் உனக்காக
என்ற குரல் ஒன்று போதும்
என் முகம் மலர...!

தினம் தினம் நமது கால்கள்
ஒன்றின்பின் ஒன்றாக நடக்கவே
இன்பம், துன்பம் அனைத்தையும்
பகிர்ந்தபடியே மெல்ல சென்றது
கல்லூரி கால நாட்கள்...!

இன்று கல்லூரி படிப்பு முடிந்தாலும்
நம் நட்புக்கு முடிவு
என்பதே இல்லை என்றும்...!

தொடரட்டும் நம் நட்பு என்றென்றும்...!!!

By,
NANCY VINCENT

Popular Posts