Posts

Showing posts with the label kavithai

ஆயிரத்தில் நானும் ஒருவன் (Share your views)

Image
எனக்கு கிடைத்தால் போதுமென்று(!) கூட்ட நெரிசலில் பேருந்தின்  இருக்கை நோக்கியோடும் பல  ஆயிரம் வீரர்களில் நானுமொருவன்..! வயதான பலர் தள்ளாடும் நிலை  கண்டும் எழுந்து இடம் விடாதே!  என்று  சுயநல முடிவெடுக்கும்-பல  நல்ல(!) மனிதர்களில் நானுமொருவன்..!    கண்முன்னே நடக்கும் அநியாயங்கள் நல்லவேளை எனக்காக வில்லையென   காதிருந்தும் செவிடனாக்கும் கருவிமாட்டும் கனிவுள்ள(!) மனிதர்களில் நானுமொருவன்..! கேரளாயென்ன கர்நாடகா யென்ன  தண்ணீர்த்தர யார் மறுத்தால்  தனக்கென்ன என்று எண்ணும்  பகுத்தறிவாளர்கள்(!) பலருள் நானுமொருவன்..! இல்லாதவருக்கு ஒரு ரூபாய் கொடுக்க  ஓராயிரம் முறை யோசித்து-எல்லாம்  இருக்கும் காதலிக்கு இலட்சங்கள்  பரிசளிக்கும் ரோமியோ(!)களில் நானுமொருவன்..!  - Anbuselvam @ Saran 

Farewell day(நம் கல்லூரி கால நட்பு) Feelings of India Day

எனக்கென்று நண்பர்கள் கிடைப்பார்கள் என்ற கனவுடன் நுழைந்தேன் கல்லூரிக்குள்...! முதல் நாள் இங்கே உட்காரு என்று சொல்லி முதல் நட்பு கிடைக்க, நாளடைவில் எனக்கில்லா நண்பர் கூட்டம் இல்லை இந்த கல்லுரியில்...! நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்று எங்கோ கஷ்டப்படும் நண்பனின் கவலையைப் போக்க போராடியும், என் நண்பன் வீட்டு விசேசங்களுக்கு சென்று அவர்களின் வீட்டுப் பிள்ளைதான் நாங்களும் என்று கவனித்த அவர்களின் பாசத்தையும் இன்றும் எங்களது நெஞ்சம் மறக்கவில்லை...! என் முகம் வாடிக்கிடக்க, நான் இருக்கிறேன் உனக்காக என்ற குரல் ஒன்று போதும் என் முகம் மலர...! தினம் தினம் நமது கால்கள் ஒன்றின்பின் ஒன்றாக நடக்கவே இன்பம், துன்பம் அனைத்தையும் பகிர்ந்தபடியே மெல்ல சென்றது கல்லூரி கால நாட்கள்...! இன்று கல்லூரி படிப்பு முடிந்தாலும் நம் நட்புக்கு முடிவு என்பதே இல்லை என்றும்...! தொடரட்டும் நம் நட்பு என்றென்றும்...!!! By, NANCY VINCENT

உனக்காக....

உனக்கே தெரியாமல் உனக்காக எழுதுகின்றேன் உன்னைப்பற்றி என்றாவது ஒருநாள் நீ இதை பார்த்து புரிந்துகொள்வாய ் என்று ஆனால் அன்று உனக்கும் தெரியாது இது உனக்காக என்று -- Via Facebook.. 

இணைந்திடுவோம் புதியநட்பில்..!

Image
என் வெற்றியை தன் வெற்றியாய் கொண்டாடும் உன்இனிய நட்பினை தொலைத்துவிட்டேன்..! என் துயில்வரை உன் துயில்தொலைத்து நீ அனுப்பும் குறுஞ் செய்திகளை இழந்துவிட்டேன்..! என் சோகங்களை தூரமாய் அனுப்பும் உன் அழகு முகச்சிரிப்பின் முகவரியை கிழித்துவிட்டேன்..! நாம் என்று இருந்த நட்பை ஏதேதோ காரணத்தினால் நான்-நீ'யென்று மாற்றிவிட்டேன்..! இவ்வளவு வலிக்குமென்று சண்டைமுடிவினிலே தெரிந்திருந்தால் மறுகணமே சொல்லியிருப்பேன் மன்னித்துவிடுயென்று நானாக-முன்வந்து..! இனிவேண்டாம் நம்வாழ்வில் இதுபோல ஒருபிரிவு இணைந்திடுவோம் புதியநட்பில் இலக்கணமாய் அனைவருக்கும்..!!

அன்புத் தோழிக்காக சில வரிகள்.......

Image
எப்போதுமே என்னுடன் இருந்ததில்லை என்னை விட்டு ஏனோ நீ விலகியதும் இல்லை ! தொடர்ந்து என்னுடன் நீ தொடர்பில் இல்லை ! என் தொடர்பு இல்லாது நீ இல்லை! பிரச்சனைகள் யாவும் நீ கலைந்ததில்லை ,! பிரச்சனைகள் ஏதும் எனக்கு வராதிருக்க  நீ முயலாமலும் இல்லை ! "அழும் வரை அழுதிடு " அடுத்த நிமிடம் உடனே சிரித்திடு என்பாய்! சில சமயம் .......... தோள்மீது கை போட்டு நீ என் தோழன் என்பாய்! சிலசமயம்........ கன்னத்தில் அடித்துவிட்டு  நான் கோபித்துக்கொண்டால், மழலையாய் பயப்பதாய் நடிப்பாய் ! நான் கவிதைகள் சொல்லும்போது காதைப் பொத்திக்கொண்டு அருமை என்பாய்! கண்ணீர்விட்டு நான் அழும்போது, காரணங்கள் ஏதுமின்றி நீயும் கரைவாய்! என் தேர்வு நாட்களில் எல்லாம் , வெகு சீக்கிரம் எழுவாய்! என் தேவைகளை புரிந்து புன்முறுவல் தருவாய் ! முடியாது என்று நான் முடங்கும் போதெல்லாம், "முயல் ஆமை " கதை சொல்லியே என்னைக் கொல்வாய் ! இறுதியில் நீயே வெல்வாய் ! உடைபட்ட கல்லாய் இருந்த என்னை "உளியாக" நீ உருமாறி, மெல்லச் செதுக்கிச் சிலையாக்கி உயிர் தந்தாய்! என்னைப் பிடிக்கவில்லை என்று சொன்ன ...

நீ வேண்டும்...!

Image
உரிமையோடு சண்டை போட உறவாய் நீ வேண்டும்...! அன்புடன் ஆறுதல் கூறும் ஆயுதமாய் உன் வார்த்தை வேண்டும்..! தட்டி கொடுத்து தூங்க வைக்கும் தூணாய் உன் தோள்கள் வேண்டும்..! நான் பார்க்கும் முதல் முடிவாய் என்றும் உன் முகம் வேண்டும்..! கடைசி வரை கைவிடாமல் என் பதியாய் நீ வேண்டும்..! வருவாயா பெண்ணே துணையாய் என் உயிரின் இறுதிவரை..!!

அம்மாவின் சக்தி ....!

Image
இடி இடிக்கும் போது... அம்மா என்று கத்தியபடி ... அம்மாவின் கையை பிடித்த ... குழந்தைக்கு தெரிகிறது .. இடியைவிட அம்மாவின் சக்தி .. பெரியது என்று ....!

என் முதல் வார்த்தை நீதானே!

Image
  என் உயிரின் ஊற்று நீயே........... தொப்புள் கொடியில் தொடங்கிய முதல் பந்தம் நீயே... உன் உதிரத்தை உணவாய் கொடுத்தாயே.... என்னை துளிரவிட உயிர்க்காற்று கொடுத்த உன்னதம் நீயே .... உன் பத்து மாத கருவறையில் என்னை பேணி காத்த தெய்வம் நீயே.... வந்து விட்டேன் உன்னை காண .... என் மழலையின் மொழி கேட்கிறதா ... உன் பச்சைக்கிளி பேசுகிறேன் .... "என் முதல் வார்த்தை நீதானே!அம்மா!அம்மா!" மூடிய கண்களை திறக்கிறேன் ....உன்னை காண .... ஏந்தி உள்ளாய் என்னை உன் கைகளில் ... வழிகிறது உன் கண்களில் ஆனந்த கண்ணீர்த்துளி.... என் மேல்பட்ட முதல் நீர்த்துளி என் பிஞ்சு விரல்களை கொஞ்சுகிறாய் ! என்ன தவம் செய்தேன் உன் உதடுகள் பட.... இருபதிலும் ஏங்குகிறேன் உன் மடியில் தவழும் குழந்தையாக ... ஏழுபதிலும் ஏங்குவேன் உனக்காக .... வரம் கொடுப்பாயா.... முடிவிலா பந்தமே.... மூச்சுக்காற்றே ..... உயிரின் ஊற்றே .... "என் முதல் வார்த்தை நீதானே!அம்மா!அம்மா!அம்மா!"  :::::எழுதியவர்:: அபிநயா அழகர்:::::::

உன் ஒருவளின் துளி கண்ணீருக்காக

Image
              பெண்ணே... என்னை ஆயிரம் பூக்களால் அலங்கரித்து... எனக்கென ஆயிரம் பேர் கண்ணீர் சிந்தினாலும்... மண்ணில் புதைத்த பின்னும் ஏங்குமடி... என் கல்லறை... உன் ஒருவளின் துளி கண்ணீருக்காக....!

மகாகவி பாரதி

Image
தேடிச்சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையானபின் மாயும் - பல   வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ ??..

நம் நட்பு

"என்ன செய்தேன் உனக்கு! ஏன் என் மேல் 'அன்பு' வைத்தாய்? புலம்ப வைத்தேன் உன்னை! இருந்தும் ஏன் என் மேல் 'புனித நட்பு' கொண்டாய்..? தவிக்க விட்டேன் உன்னை! இருந்தும் ஏன் என்னை 'மகிழ்ச்சி தண்ணிரில்' மிதக்க விட்டாய்? மிரள வைத்தேன் உன்னை! இருந்தும் ஏன் என் மேல் 'மிரட்டும் பாசம்' வைத்தாய் ? கலங்க வைத்தேன் உன்னை! இருந்தும் ஏன் என் மேல் 'களங்கமில்லா நேசம்' வைத்தாய்?" ஆனால், உனக்காக செய்வேன் 'ஒன்றை மட்டும்'....! "கொடுத்துவிடுவேன் என் உயிரையும் 'என்றும் உன்னை காக்க'....!"