Posts

Showing posts with the label தினம் ஒரு கதை

The Accident ( Short Story)

Image
போலீஸ்காரரின் போன் அடித்தது " ஹலோ" "நீங்க திவ்யாவின் அப்பாவா?" "ஆமாம். நீங்க" "நாங்க சாய் ஹாஸ்பிடலிலிருந்து பேசறோம். உங்க மகளுக்கு ஒரு  ஆக்சிடெண்ட். உடனே வர முடியுமா?" பதறியபடி போனார். அங்கே அவர் மகள் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். "யாரோ ஒரு பையன். குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வந்திருப்பான் போல. வந்தவன் உங்க மகளோட ஸ்கூட்டில இடிச்சிட்டான். ஓவர் ஸ்பீடுங்கறதால் நல்ல அடி. ரெண்டு பேரயும் பக்கத்தில் நின்றவங்க இங்கே கொண்டு வந்து சேர்த்தாங்க. " சொல்லிக்கொண்டே போனாள் நர்ஸ். பைக் ஓட்டிய பையனை பார்த்த திவ்யாவின் அப்பா அதிர்ந்தார் 'இவனா?' என விளரினார்.. சில நிமிடங்களுக்கு முன்... "ஸ்டாப் ஸ்டாப். ஓரமா பைக்கை நிறுத்து. குடிச்சிருக்கியா?" "இல்ல சார்". "பொய் சொல்லாதே. அதான் வர்ற வாடையில் எனக்கே போதை வந்திடும் போல இருக்கே!" "அது... வந்து.. வந்து..." "அதான் வந்துட்டியே. அப்புறம் என்ன வந்து வந்துன்னு உளறுறே.. சரி சரி எவ்வளவு இருக்கு?" "சார்..." "தம்பி ட்ரங்க் அண்ட் ட்ரைவ் தப்புன்னு...

Thinam Oru Kadhai(தினம் ஒரு கதை)Message Ulla Kadhai Boss(மெசேஜ் உள்ள கதை பாஸ்)-2

இரவு 11 மணி சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார். "தம்பி ஆஸ்பத்திரி போகனும்" "ந ான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்" "என் மகளுக்கு பிரசவ நேரம்ப்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார் அப்பெண்மணி. "நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன். அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது. டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது. அக்கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை. இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது. இப்போது டாக்ஸி இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது. நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வய...

Thinam Oru Kadhai(தினம் ஒரு கதை)Message Ulla Kadhai Boss(மெசேஜ் உள்ள கதை பாஸ்)-1

Image
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூர த்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."... அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்...