Hikoo (என்னமோ தெரியவில்லை இன்றென்னை விரட்டி விரட்டி இந்தக் கவிதை தொந்தரவு செய்கிறது)

தேர்வென்றும் நோயென்றும் நீ சொன்ன ஏதேதோ காரணங்களால் பேரன்களை மருமகளை நீ அழைத்து வராமைக்கு சமாதானப் பட்ட இந்தப் பாழும் கிழவிக்கு பத்து நாள் பிடித்தது உன்னையே நீ அழைத்து வரவில்லை என்ற உண்மை பிடிபட....