எப்போதுமே என்னுடன் இருந்ததில்லை
என்னை விட்டு ஏனோ நீ
விலகியதும் இல்லை !
தொடர்ந்து என்னுடன் நீ
தொடர்பில் இல்லை !
என் தொடர்பு இல்லாது நீ இல்லை!
பிரச்சனைகள் யாவும் நீ கலைந்ததில்லை ,!
பிரச்சனைகள் ஏதும் எனக்கு வராதிருக்க
நீ முயலாமலும் இல்லை !
"அழும் வரை அழுதிடு "
அடுத்த நிமிடம்
உடனே சிரித்திடு என்பாய்!
சில சமயம் ..........
தோள்மீது கை போட்டு
நீ என் தோழன் என்பாய்!
சிலசமயம்........
கன்னத்தில் அடித்துவிட்டு
நான் கோபித்துக்கொண்டால்,
மழலையாய் பயப்பதாய் நடிப்பாய் !
நான் கவிதைகள் சொல்லும்போது
காதைப் பொத்திக்கொண்டு
அருமை என்பாய்!
கண்ணீர்விட்டு நான் அழும்போது,
காரணங்கள் ஏதுமின்றி
நீயும் கரைவாய்!
என் தேர்வு நாட்களில் எல்லாம் ,
வெகு சீக்கிரம் எழுவாய்!
என் தேவைகளை புரிந்து
புன்முறுவல் தருவாய் !
முடியாது என்று நான்
முடங்கும் போதெல்லாம்,
"முயல் ஆமை " கதை சொல்லியே
என்னைக் கொல்வாய் !
இறுதியில் நீயே வெல்வாய் !
உடைபட்ட கல்லாய் இருந்த என்னை
"உளியாக" நீ உருமாறி,
மெல்லச் செதுக்கிச் சிலையாக்கி
உயிர் தந்தாய்!
என்னைப் பிடிக்கவில்லை என்று
சொன்ன "என்னவளை "
என் எதிரே திட்டித் தீர்த்தாய்!
ஆனால் எனக்குத் தெரியாது
அவளிடம், தினம் தினம்
கெஞ்சித் தோற்றாய்!
என்னவளின் திருமண நாளை
எனக்குத் தெரியாது
மறைக்கப் பார்த்தாய் !
எனக்குத் தெரிந்த பின்
என்னைத் தேற்ற இயலாது
இறுகக் கட்டி அழுது தீர்த்தாய்!
நல்ல வேலை வாங்கித் தந்தாய்!
நாளை எப்படி இருக்கும் என்று
சொல்லித் தந்தாய் !
ஒரு நாள் திருமண பந்தத்தில்
கலந்து போனாய்......
உன் நண்பனை விட்டு
பிரிந்தும் போனாய்.....
மாறாத நம் நட்பை,
மறந்தும் போனாய் !
என்றாலும் ..... எது நீ செய்தாலும் ,
அதிலொரு ஏற்றமிகு
வினை இருக்கும் என்று....
அமைதியாய் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையை.........
தோழியே நீ
சொல்லிக் கொடுத்தபடி!
இப்படிக்கு
உன் நண்பன் ..
---Rajesh.