பெருமகிழ்ச்சி ( Tamil Kavithai)

மரத்தில் எஞ்சியிருக்கும் கடைசி இலைக்கு பெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா? வாய்க்கும். உச்சிவெயிலில் தரையில் ஒரு சிற்றெறும்பு நடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம். காற்றில் ஆடியபடி தொடர்ச்சியாக எறும்பின் பாதையில் நிழலிட அந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம். ஆட்டத்தின் உச்சத்தில் இலை மரத்தை விட்டு அகலலாம். அப்போதும், ஓர் குடையாய் எறும்பின் மேலேயே விழ வாய்த்தால், தாய் வந்து குட்டியை ஒளித்ததற்காக கண்சிவக்க கோபிக்கும் வரை அந்த இருப்பு தொடருமானால், அதுவே பெருமகிழ்ச்சி. - வீரன்குட்டி.