ஆசைதான் எனக்கு !!!!!

மனைவியாய் இறுதிவரை ஒரு தோழியாய் வரப்போகும் அவள் யார் என்று அறிய ஆசை... வாரம் ஒரு முறையாவது அவளுக்கு முன் எழுந்து அவள் தூங்கும் அழகை ரசிக்க ஆசை... தினமும் மலர் சூடி அவள் நெற்றியில் என் இதழ் சேர்க்க ஆசை.... அனைவரும் இருக்கும் நேரத்தில் கள்வனாய் அவள் இடைக்கிள்ள ஆசை... யாரும் இல்லா நேரத்தில் முத்தத்தில் அவளை நனைக்க ஆசை... குழந்தையாய் அவள் செய்யும் தவறுகளை ரசிக்க ஆசை.... யாரும் இல்லா சாலையில் அவள் கைபிடித்து நடக்க ஆசை..... முதன் முதலில் நான் வாங்கும் வாகனத்தில் அவளோடு அமர்த்து வெகுதூரம் செல்ல ஆசை... மழை நேரத்தில் ஒரு குடைக்குள் அவளுடன் இருக்க ஆசை.... மழையில் நனைந்த என் தலையை அவள் புடவை நுனிகொண்டு துடைக்க ஆசை.. என் உயிர் சுமக்கும் அவளை அன்று என் கண்ணுக்குள் வைத்து பார்க்க ஆசை... என் உயிர் பிறந்த பின்பும் அவள் முகம் முதல் பார்க்க ஆசை... இப்படியே 60 ஆண்டு காலம் அவளோடு நான் வாழ ஆசை... 60 ஆன பின்பும் அவள் முகத்தில் விழுந்த ரேகையும் கன்னத்தில் விழுந்த குளியையும் மூக்கு கண்ணாடி போட்டு ரசிக...