எனக்கு கிடைத்தால் போதுமென்று(!)
கூட்ட நெரிசலில் பேருந்தின்
இருக்கை நோக்கியோடும் பல
ஆயிரம் வீரர்களில் நானுமொருவன்..!
வயதான பலர் தள்ளாடும் நிலை
கண்டும் எழுந்து இடம் விடாதே!
என்று சுயநல முடிவெடுக்கும்-பல
நல்ல(!) மனிதர்களில் நானுமொருவன்..!
கண்முன்னே நடக்கும் அநியாயங்கள்
நல்லவேளை எனக்காக வில்லையென
காதிருந்தும் செவிடனாக்கும் கருவிமாட்டும்
கனிவுள்ள(!) மனிதர்களில் நானுமொருவன்..!
கேரளாயென்ன கர்நாடகா யென்ன
தண்ணீர்த்தர யார் மறுத்தால்
தனக்கென்ன என்று எண்ணும்
பகுத்தறிவாளர்கள்(!) பலருள் நானுமொருவன்..!
இல்லாதவருக்கு ஒரு ரூபாய் கொடுக்க
ஓராயிரம் முறை யோசித்து-எல்லாம்
இருக்கும் காதலிக்கு இலட்சங்கள்
பரிசளிக்கும் ரோமியோ(!)களில் நானுமொருவன்..!
- Anbuselvam @ Saran