Posts

Showing posts with the label nice tamil kavithai

பெண்ணல்ல நீ எனக்கு

Image
.. நாள் தவறி போனதே என நீ வெட்கத்தோடு உரைத்ததும்.. மார்பில் முகம் புதைத்ததும் மேடிட்ட வயிறு கண்டு முத்தமிட்டு சிரித்ததும்.. புளிப்பு மாங்காய் வேண்டுமென காதோரம் சொன்னதும் கண்ணுக்குள் ஆடுதடி.. மூன்றாம் மாதம் முதல் நீர் இறைக்க தடை போட்டேன்.. ஐந்தாம் மாதம் முதல் கனம் தூக்க தடை போட்டேன்.. ஏழாம் மாதம் தனில் சீமந்தம் செய்தார்கள்.. மஞ்சள் பூசி, வளவி இட்டு திருஷ்டி சுற்றி போட்டாலும் போய்விடுமா உன் அழகு தாய்மையில்.. ஆண்டவன் இருந்திருந்தால் அப்பொழுதே கேட்டிருப்பேன் ஏன் படைத்தாய் ஆண் எனவே மண்ணில் என்னை? தினமும் மாலை கை கோர்த்து நடை பயின்று.. இரவெல்லாம் கண் விழித்து மடி மீது உறங்க வைத்தேன் தாயென்றே உனை.. நாட்கள் நெருங்க, நெருங்க கலவரம் கண் மறைத்து நம்பிக்கை கை பற்றி மார்பனைப்பேன் என் உயிரே..! இறுதியாய் பல் கடித்து வலியென நீ புலம்புகையில் ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை வரும் முன்னே வியர்த்தொழுகும் முகமெல்லாம்.. சில நொடி பொழுதுகளில் வந்தனரே உன் தாயும், என் தாயும் உறவினரும் நண்பருமாய்.. தனியறைக்குள் நீ செல்ல கதறும் ஒலி கேட்டு தாங்கவும் முடியாமல் தனியிடம் அமர்ந்திருந்தேன், கண்ணீரும் இல்லாமல் ந...

ஆயிரத்தில் நானும் ஒருவன் (Share your views)

Image
எனக்கு கிடைத்தால் போதுமென்று(!) கூட்ட நெரிசலில் பேருந்தின்  இருக்கை நோக்கியோடும் பல  ஆயிரம் வீரர்களில் நானுமொருவன்..! வயதான பலர் தள்ளாடும் நிலை  கண்டும் எழுந்து இடம் விடாதே!  என்று  சுயநல முடிவெடுக்கும்-பல  நல்ல(!) மனிதர்களில் நானுமொருவன்..!    கண்முன்னே நடக்கும் அநியாயங்கள் நல்லவேளை எனக்காக வில்லையென   காதிருந்தும் செவிடனாக்கும் கருவிமாட்டும் கனிவுள்ள(!) மனிதர்களில் நானுமொருவன்..! கேரளாயென்ன கர்நாடகா யென்ன  தண்ணீர்த்தர யார் மறுத்தால்  தனக்கென்ன என்று எண்ணும்  பகுத்தறிவாளர்கள்(!) பலருள் நானுமொருவன்..! இல்லாதவருக்கு ஒரு ரூபாய் கொடுக்க  ஓராயிரம் முறை யோசித்து-எல்லாம்  இருக்கும் காதலிக்கு இலட்சங்கள்  பரிசளிக்கும் ரோமியோ(!)களில் நானுமொருவன்..!  - Anbuselvam @ Saran 

Farewell day(நம் கல்லூரி கால நட்பு) Feelings of India Day

எனக்கென்று நண்பர்கள் கிடைப்பார்கள் என்ற கனவுடன் நுழைந்தேன் கல்லூரிக்குள்...! முதல் நாள் இங்கே உட்காரு என்று சொல்லி முதல் நட்பு கிடைக்க, நாளடைவில் எனக்கில்லா நண்பர் கூட்டம் இல்லை இந்த கல்லுரியில்...! நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்று எங்கோ கஷ்டப்படும் நண்பனின் கவலையைப் போக்க போராடியும், என் நண்பன் வீட்டு விசேசங்களுக்கு சென்று அவர்களின் வீட்டுப் பிள்ளைதான் நாங்களும் என்று கவனித்த அவர்களின் பாசத்தையும் இன்றும் எங்களது நெஞ்சம் மறக்கவில்லை...! என் முகம் வாடிக்கிடக்க, நான் இருக்கிறேன் உனக்காக என்ற குரல் ஒன்று போதும் என் முகம் மலர...! தினம் தினம் நமது கால்கள் ஒன்றின்பின் ஒன்றாக நடக்கவே இன்பம், துன்பம் அனைத்தையும் பகிர்ந்தபடியே மெல்ல சென்றது கல்லூரி கால நாட்கள்...! இன்று கல்லூரி படிப்பு முடிந்தாலும் நம் நட்புக்கு முடிவு என்பதே இல்லை என்றும்...! தொடரட்டும் நம் நட்பு என்றென்றும்...!!! By, NANCY VINCENT

Tamil Kavithai - Enaku Vidai Naane(எனக்கு விடை நானே)

தோற்றமோ மாற்றமோ   நிலைகளோ நியதியோ தினம் தோன்றும் எண்ணப் பிழைகளோ என்னவென்று நானறியேன் என் வார்த்தைகள் என்னுடன் பேசுகின்ற சத்தம் மனதில் சிறு புன்னகை முகத்தில் பதித்து, மன அலைகளை நிறைத்தேன் விழியில் பெற்றோர்க்கு புதிதானேன் நண்பர்களுக்கும் புதிரானேன்  உயிர் தோழிக்கும் கேள்வி குறியானேன், எனக்கு நானே பதிலானேன் வெறுமை களைந்து , கனவுகள் அணிந்து புதிய கண்ணோட்டத்தில் அன்றாட செயல்கள் காண பாதைகள் கண்டேன் -அவை என்னை வரவேற்று அணைக்கக் கண்டேன் நல்ல மாற்றங்களால் தினம் நாட்களை அலங்கரிக்கும் கலையை கற்றேன் கவலை மறந்தேன் வலிகள் என்னை சந்திப்பதுண்டு சில நேரம் வந்து போகும் தலைவலி போல சில நட்புகள் தந்து போவதுண்டு மருந்து போன்ற உடனிருப்பை உலகம் அழகு வரங்கள் பெரிது –இங்கு அலைபாயாமல் , அதிகம் யோசிக்காமல் அமைதியாய் நன்றி சொல்ல காரணங்கள் கணக்கற்றது நாம் நினைத்தால் என்னை தேடிவரும் எனக்கான நன்மைகள் தினம் அவற்றை அனுபவித்துச் செல்வதேயன்றி என்னை தொலைத்து எதையும் தேட என்றும் அவசியம் இல்லை உலகில் விமர்சனங்களை கண்டு சிரிக்கிறேன் வலிமையை ...

Tamil Kavithai- Pirivugal En Parvaiyil (பிரிவுகள் என் பார்வையில்)

Image
சிறகிலிருந்து பிரியும் ஓர் இறகு மரத்திலிருந்து உதிரும் ஓர் இலை மேகத்திலிருந்து விழும் ஒரு மழைத்துளி ஏனோ வார்த்தைகளின்றி ஊமையான இவற்றால் சத்தமாய் அறிவிக்க முடியும் நிஜங்களை விரிந்த சிறகில் சேர்ந்து அந்த இறகு வானில் பறந்த நாட்கள் பொய்யன்று தனியாய் உதிர்கையில் காற்றில் அது எழுதிச் செல்லும் நினைவுகளின் காவியமும் பொய்யன்று அடர்ந்த மரத்துடன் சேர்ந்து இலை துளிர்த்து பசுமையில் திளைத்தது செழித்தது பொய்யன்று அதே மரத்தின் உரமாய் மாற வாடி உதிர்கையில் அது வரைந்து செல்லும் பிரிவின் துயர் பொய்யன்று நீல மேகத்தின் பரப்பில் அந்த தூய நீர்துளி மிதந்த கதை பொய்யன்று உலகம் மகிழ அது தன்னைப் பிரித்து உவர் கடலில் விழும் காட்சியும் பொய்யன்று இனிய இறந்தகால பக்கங்களின் மனிதர்களும் மகிழ்வுகளும் நிகழ்வுகளும் நட்புகளும் நானும் பொய்யன்று இந்த நிகழ்காலத்தில் தொடரும் மாறா நினைவுகளும் பிரிவுகளும் மாற்றங்களின் தேவைகளும் பொய்யன்று

இணைந்திடுவோம் புதியநட்பில்..!

Image
என் வெற்றியை தன் வெற்றியாய் கொண்டாடும் உன்இனிய நட்பினை தொலைத்துவிட்டேன்..! என் துயில்வரை உன் துயில்தொலைத்து நீ அனுப்பும் குறுஞ் செய்திகளை இழந்துவிட்டேன்..! என் சோகங்களை தூரமாய் அனுப்பும் உன் அழகு முகச்சிரிப்பின் முகவரியை கிழித்துவிட்டேன்..! நாம் என்று இருந்த நட்பை ஏதேதோ காரணத்தினால் நான்-நீ'யென்று மாற்றிவிட்டேன்..! இவ்வளவு வலிக்குமென்று சண்டைமுடிவினிலே தெரிந்திருந்தால் மறுகணமே சொல்லியிருப்பேன் மன்னித்துவிடுயென்று நானாக-முன்வந்து..! இனிவேண்டாம் நம்வாழ்வில் இதுபோல ஒருபிரிவு இணைந்திடுவோம் புதியநட்பில் இலக்கணமாய் அனைவருக்கும்..!!

அன்புத் தோழிக்காக சில வரிகள்.......

Image
எப்போதுமே என்னுடன் இருந்ததில்லை என்னை விட்டு ஏனோ நீ விலகியதும் இல்லை ! தொடர்ந்து என்னுடன் நீ தொடர்பில் இல்லை ! என் தொடர்பு இல்லாது நீ இல்லை! பிரச்சனைகள் யாவும் நீ கலைந்ததில்லை ,! பிரச்சனைகள் ஏதும் எனக்கு வராதிருக்க  நீ முயலாமலும் இல்லை ! "அழும் வரை அழுதிடு " அடுத்த நிமிடம் உடனே சிரித்திடு என்பாய்! சில சமயம் .......... தோள்மீது கை போட்டு நீ என் தோழன் என்பாய்! சிலசமயம்........ கன்னத்தில் அடித்துவிட்டு  நான் கோபித்துக்கொண்டால், மழலையாய் பயப்பதாய் நடிப்பாய் ! நான் கவிதைகள் சொல்லும்போது காதைப் பொத்திக்கொண்டு அருமை என்பாய்! கண்ணீர்விட்டு நான் அழும்போது, காரணங்கள் ஏதுமின்றி நீயும் கரைவாய்! என் தேர்வு நாட்களில் எல்லாம் , வெகு சீக்கிரம் எழுவாய்! என் தேவைகளை புரிந்து புன்முறுவல் தருவாய் ! முடியாது என்று நான் முடங்கும் போதெல்லாம், "முயல் ஆமை " கதை சொல்லியே என்னைக் கொல்வாய் ! இறுதியில் நீயே வெல்வாய் ! உடைபட்ட கல்லாய் இருந்த என்னை "உளியாக" நீ உருமாறி, மெல்லச் செதுக்கிச் சிலையாக்கி உயிர் தந்தாய்! என்னைப் பிடிக்கவில்லை என்று சொன்ன ...

உன் ஒருவளின் துளி கண்ணீருக்காக

Image
              பெண்ணே... என்னை ஆயிரம் பூக்களால் அலங்கரித்து... எனக்கென ஆயிரம் பேர் கண்ணீர் சிந்தினாலும்... மண்ணில் புதைத்த பின்னும் ஏங்குமடி... என் கல்லறை... உன் ஒருவளின் துளி கண்ணீருக்காக....!

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

Image
வசதியாகத்தான் இருக்கிறது மகனே…!! நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம். பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது! முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்! இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்! இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு. நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு… வாழ்க்கை இதுதா...

அப்பாவுக்கு மகள் எழுதுவது

Image
>கண்மூடி உன் கைகளில்  கிடந்த போது...  எனக்கான கனவுகளை  நீ சுமந்தாய்...!  >ஆறடி உயரத்தை  அரையடியாய் குறுக்கி  அம்பாரி நான் ஏற..  ஆனந்தமாய் நீ ரசித்தாய்...! >'அ' எழுதியதற்கே...  'அறிவாளி என் மகள்' என  ஆனந்த கூத்தாடினாய்...! >என் ஆசைகளுக்கு  அஸ்திவாரமிட்டதில்  உன் தேவையை  நீ மறந்தாய்...! >இரவும் பகலும்  எனையே நினைத்தாய்...!  உன் வியர்வையை சிந்தி  உணவை தந்தாய்...! >கல்யாணம் செய்துவித்து  கடனாளியாகி நின்றாய்...!  நீ கொடுத்த கல்வியால்  பணம் காய்க்கும் மரமாய் நான்...! >வயோதிகமும் வறுமையும்  உன்னை வாட்ட...  ஒரு நூறு உனக்கு கொடுக்க  எனக்கோ உரிமை இல்லை..! >உயர் கொடுத்த உத்தமனே  என்னை மகளாய்  பெற்றதனால்  என்ன சுகம் கண்டாய் நீ? --Thilagavathy  ::::Courtesy:::: >Varamalar-Dinamalar<