Monday, 1 April 2013

இணைந்திடுவோம் புதியநட்பில்..!

என் வெற்றியை
தன் வெற்றியாய்
கொண்டாடும் உன்இனிய
நட்பினை தொலைத்துவிட்டேன்..!

என் துயில்வரை
உன் துயில்தொலைத்து
நீ அனுப்பும் குறுஞ்
செய்திகளை இழந்துவிட்டேன்..!

என் சோகங்களை
தூரமாய் அனுப்பும்
உன் அழகு முகச்சிரிப்பின்
முகவரியை கிழித்துவிட்டேன்..!

நாம் என்று
இருந்த நட்பை
ஏதேதோ காரணத்தினால்
நான்-நீ'யென்று மாற்றிவிட்டேன்..!

இவ்வளவு வலிக்குமென்று
சண்டைமுடிவினிலே தெரிந்திருந்தால்
மறுகணமே சொல்லியிருப்பேன்
மன்னித்துவிடுயென்று நானாக-முன்வந்து..!

இனிவேண்டாம் நம்வாழ்வில்
இதுபோல ஒருபிரிவு
இணைந்திடுவோம் புதியநட்பில்
இலக்கணமாய் அனைவருக்கும்..!!

2 comments:

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts