ஒருத்தன் டாக்ஸி'யில் போய்ட்டு இருக்கும் போது 'டக்'கென்று டிரைவர் தோளை தொட்டான்.திகைப்பில் கட்டுப்பாட்டை இழந்து டாக்ஸி'யை ஓட்டிய டிரைவர் யார் மேலேயும் இடிக்காமல் ஒரு வழியாக பள்ளத்தில் இறக்கி,வண்டியை நிறுத்தினார்.
பின்னால் உக்காந்திருந்த ஆள் பயந்து நடுங்கி,சாமியை எல்லாம் வேண்டிக்கிட்டு இருந்தான். டிரைவர்'கிட்ட "Sorry" கேட்டான் .
அதற்கு டிரைவர்,"வண்டி ஓடிட்டு இருக்கும் பொது எதுக்கய்யா என் தோளை தொட்டே?" என்று கேட்டார்.
அவன்,"உன்ன பார்த்தா அனுபவமுள்ள டிரைவர் போல தெரியுது. ஆனா உன் தோளை தொட்டதுக்கு நீ இப்படி 'ஷாக்' ஆவேன்னு எதிர்பார்க்கலை" என்றான்.
உடனே டிரைவர் ,"இல்ல....எனக்கு டாக்ஸி புதுசு..நீங்க தான் என் முதல் சவாரி"என்றதும், " அய்யோ...இதுக்கு முன்னாடி நீ வண்டி ஒட்டினது இல்லையா?" என பயந்தப்படி கேட்டான் பயணி.
டிரைவர்,"இதுக்கு முன்னாடி நான் வண்டிதான் ஓட்டிக்கிட்டு இருந்தேன். ஆனா, அது பிண வண்டி.. அதான் என் தோளைத் தொட்டதும் ,பழைய நினைப்புல பயந்து போயிட்டேன்" என்றார்..
No comments:
Post a Comment
Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!