Saturday, 20 April 2013

உன்னருகில் இருக்கும் வேளைகளில் , Kavithaikal

 

உன்னருகில் இருக்கும் வேளைகளில்
எந்தன் நேரம் கூட
உன் மீதான பொறாமையால்
வேகமாக ஓடி விடுகிறது..


உன்னருகில் இருக்கும் வேளைகளில்
எந்தன் இமைகள் கூட
உன்னை பிரிய விருப்பம்
இன்றித் துடிக்க மறுக்கிறது..


உன்னருகில் இருக்கும் வேளைகளில்
எந்தன் இதயம் கூட
தன் வேலையை மறந்து
மயங்கிப் போய் விடுகிறது..


உன்னருகில் இருக்கும் வேளைகளில்
எந்தன் மூளை கூட
உந்தன் உதடுகள் கூறும்
வார்த்தைகளை மட்டுமே சேகரிக்கிறது..


என்ன தான் செய்தாய் பெண்ணே
என்னையே நான் மறந்து விட்டேன்..!
தொலைந்து விடாதே கனவை போலே..
பிரிந்து விடும் என்னுயிர் என்னை விட்டு..! 

 

1 comment:

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts