Posts

Showing posts with the label Comedy stories

Comedy Stories

அப்பா: எப்படி இந்தளவு போன் பில் வந்தது. நான் என் அலுவலகத்தில் உள்ள போன் தான் பயன்படுத்துறேன் ­. இங்கிருந்து ஒரு போன் கூட செய்வதில்லை. அம்மா: நானும் அலுவலக போன் தான் பயன்படுத்துறேன் ­. வீட்ல இருந்து ஒரு போன் கூட பண்றது கிடையாது. மகன்: நான் என் அலுவலகத்தில் தந்த மொபைல் போன் தான் உபயோகிக்கிறேன். ‪ அதுவரை‬ அமைதியாய் இருந்த வேலைக்காரனை மூவரும் பார்த்தனர். நானும் என் அலுவலகத்தில் உள்ள போன் தான் உபயோகிக்கிறேன். மற்ற படி எனக்கு எதுவும் தெரியாது. :P

கடவுளை காணவில்லை..!!

ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள் . பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர். அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் .பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும். கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான். அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.

திருமணமானவர்கள் ­ கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்

Image
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!. வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் ­ கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார். கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே? மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்) கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன்...

டாக்ஸி டிரைவர்-Taxi Driver

Image
                                                   ஒருத்தன் டாக்ஸி'யில் போய்ட்டு இருக்கும் போது 'டக்'கென்று டிரைவர் தோளை தொட்டான்.திகைப்பில் கட்டுப்பாட்டை இழந்து டாக்ஸி'யை ஓட்டிய  டிரைவர் யார் மேலேயும் இடிக்காமல் ஒரு வழியாக பள்ளத்தில் இறக்கி,வண்டியை நிறுத்தினார்.                   பின்னால் உக்காந்திருந்த ஆள் பயந்து நடுங்கி,சாமியை எல்லாம் வேண்டிக்கிட்டு இருந்தான். டிரைவர்'கிட்ட "Sorry" கேட்டான்  .                      அதற்கு டிரைவர்,"வண்டி ஓடிட்டு இருக்கும் பொது எதுக்கய்யா என் தோளை தொட்டே?" என்று கேட்டார்.                       அவன்,"உன்ன பார்த்தா அனுபவமுள்ள டிரைவர் போல த...

ஒரு உதவி (Comedy Story)

Image
விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. கணவன் மட்டும் எழுந்து போனான். கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான். “யாரது?” என்று மனைவி கேட்டாள். “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “பார்த்தீங்களா? 3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “...