Tuesday, 10 December 2013

கடவுளை காணவில்லை..!!

ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள்
.
பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர்.

அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் .பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும்.

கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான்.

அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.

No comments:

Post a Comment

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts