Saturday, 10 November 2012

அப்பாவுக்கு மகள் எழுதுவது


>கண்மூடி உன் கைகளில்
 கிடந்த போது...
 எனக்கான கனவுகளை
 நீ சுமந்தாய்...! 


>ஆறடி உயரத்தை
 அரையடியாய் குறுக்கி
 அம்பாரி நான் ஏற..
 ஆனந்தமாய் நீ ரசித்தாய்...!



>'அ' எழுதியதற்கே...
 'அறிவாளி என் மகள்' என
 ஆனந்த கூத்தாடினாய்...!


>என் ஆசைகளுக்கு
 அஸ்திவாரமிட்டதில்
 உன் தேவையை
 நீ மறந்தாய்...!


>இரவும் பகலும்
 எனையே நினைத்தாய்...!
 உன் வியர்வையை சிந்தி
 உணவை தந்தாய்...!


>கல்யாணம் செய்துவித்து
 கடனாளியாகி நின்றாய்...!
 நீ கொடுத்த கல்வியால்
 பணம் காய்க்கும் மரமாய் நான்...!


>வயோதிகமும் வறுமையும்
 உன்னை வாட்ட...
 ஒரு நூறு உனக்கு கொடுக்க
 எனக்கோ உரிமை இல்லை..!


>உயர் கொடுத்த உத்தமனே
 என்னை மகளாய்
 பெற்றதனால்
 என்ன சுகம் கண்டாய் நீ?

--Thilagavathy 

::::Courtesy::::
>Varamalar-Dinamalar<

No comments:

Post a Comment

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts