" ஹலோ"
"நீங்க திவ்யாவின் அப்பாவா?"
"ஆமாம். நீங்க"
"நாங்க சாய் ஹாஸ்பிடலிலிருந்து
பேசறோம். உங்க மகளுக்கு ஒரு ஆக்சிடெண்ட். உடனே வர முடியுமா?"
பதறியபடி போனார். அங்கே அவர் மகள் ரத்த
வெள்ளத்தில் கிடந்தாள்.
"யாரோ ஒரு பையன். குடிச்சிட்டு வண்டி
ஓட்டிட்டு வந்திருப்பான் போல. வந்தவன்
உங்க மகளோட ஸ்கூட்டில இடிச்சிட்டான்.
ஓவர் ஸ்பீடுங்கறதால் நல்ல அடி. ரெண்டு
பேரயும் பக்கத்தில் நின்றவங்க இங்கே
கொண்டு வந்து சேர்த்தாங்க. "
சொல்லிக்கொண்டே போனாள் நர்ஸ். பைக்
ஓட்டிய பையனை பார்த்த திவ்யாவின்
அப்பா அதிர்ந்தார் 'இவனா?' என
விளரினார்..
சில நிமிடங்களுக்கு முன்...
"ஸ்டாப் ஸ்டாப். ஓரமா பைக்கை நிறுத்து.
குடிச்சிருக்கியா?"
"இல்ல சார்".
"பொய் சொல்லாதே. அதான் வர்ற
வாடையில் எனக்கே போதை வந்திடும்
போல இருக்கே!"
"அது... வந்து.. வந்து..."
"அதான் வந்துட்டியே. அப்புறம் என்ன
வந்து வந்துன்னு உளறுறே.. சரி சரி
எவ்வளவு இருக்கு?"
"சார்..."
"தம்பி ட்ரங்க் அண்ட் ட்ரைவ் தப்புன்னு
தெரியும்ல... அப்புறம் என்ன இருக்கறதை
கொடுத்திட்டு வண்டியை எடுத்துக்க".
" நூறு ரூபாய்தான் சார் கைல இருக்கு"
"பரவாயில்லை. கொடுத்திட்டு போ"
"இந்தாங்க சார்"
நூறு ரூபாயை வாங்கி பாக்கெட்டில்
திணித்தார்.
---
நர்ஸ் கேட்டார் "சார் என்ன சார் யோசனை?
இந்த மெடிசினை வாங்கிட்டு வாங்க
சீக்கிரம்" என்றவாறு ப்ரஸ்கிரிபசனை அவர்
கையில் திணித்தாள் நர்ஸ்.
மருந்தை வாங்குவதற்காக பாக்கெட்டில்
கை விட்டு பணத்தை எடுத்தார். சற்று
முன் அவன் லஞ்சம் கொடுத்த நூறு
ரூபாய் நோட்டும் வெளியே வந்தது.
அதிலிருந்த காந்தி அவரை பார்த்து
சிரித்தது போல தெரிந்தது....!!!
"""" படித்து பிடித்தது """""
No comments:
Post a Comment
Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!