Saturday, 30 March 2013

என் முதல் வார்த்தை நீதானே!

என்  முதல் வார்த்தை நீதானே! - தமிழ் மொழி கவிதை


 
என் உயிரின் ஊற்று நீயே...........
தொப்புள் கொடியில் தொடங்கிய முதல் பந்தம் நீயே...
உன் உதிரத்தை உணவாய் கொடுத்தாயே....
என்னை துளிரவிட உயிர்க்காற்று கொடுத்த உன்னதம் நீயே ....
உன் பத்து மாத கருவறையில் என்னை பேணி காத்த தெய்வம் நீயே....

வந்து விட்டேன் உன்னை காண ....
என் மழலையின் மொழி கேட்கிறதா ...
உன் பச்சைக்கிளி பேசுகிறேன் ....
"என் முதல் வார்த்தை நீதானே!அம்மா!அம்மா!"

மூடிய கண்களை திறக்கிறேன் ....உன்னை காண ....
ஏந்தி உள்ளாய் என்னை உன் கைகளில் ...
வழிகிறது உன் கண்களில் ஆனந்த கண்ணீர்த்துளி....
என் மேல்பட்ட முதல் நீர்த்துளி
என் பிஞ்சு விரல்களை கொஞ்சுகிறாய் !
என்ன தவம் செய்தேன் உன் உதடுகள் பட....

இருபதிலும் ஏங்குகிறேன் உன் மடியில் தவழும் குழந்தையாக ...
ஏழுபதிலும் ஏங்குவேன் உனக்காக ....
வரம் கொடுப்பாயா....
முடிவிலா பந்தமே....
மூச்சுக்காற்றே .....
உயிரின் ஊற்றே ....
"என் முதல் வார்த்தை நீதானே!அம்மா!அம்மா!அம்மா!" 


:::::எழுதியவர்:: அபிநயா அழகர்:::::::

No comments:

Post a Comment

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts