Wednesday 5 August 2015

பெருமகிழ்ச்சி ( Tamil Kavithai)


மரத்தில்
எஞ்சியிருக்கும்
கடைசி இலைக்கு

பெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா?
வாய்க்கும்.
உச்சிவெயிலில்
தரையில் ஒரு சிற்றெறும்பு
நடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம்.
காற்றில் ஆடியபடி
தொடர்ச்சியாக
எறும்பின் பாதையில்
நிழலிட
அந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம்.
ஆட்டத்தின் உச்சத்தில்
இலை
மரத்தை விட்டு அகலலாம்.
அப்போதும்,
ஓர் குடையாய்
எறும்பின் மேலேயே
விழ வாய்த்தால்,
தாய் வந்து
குட்டியை ஒளித்ததற்காக
கண்சிவக்க கோபிக்கும் வரை
அந்த இருப்பு தொடருமானால்,
அதுவே
பெருமகிழ்ச்சி.
- வீரன்குட்டி.

Saturday 25 July 2015

Hikoo (என்னமோ தெரியவில்லை இன்றென்னை விரட்டி விரட்டி இந்தக் கவிதை தொந்தரவு செய்கிறது)


தேர்வென்றும்
நோயென்றும்
நீ சொன்ன ஏதேதோ காரணங்களால்
பேரன்களை மருமகளை
நீ அழைத்து வராமைக்கு சமாதானப் பட்ட
இந்தப் பாழும் கிழவிக்கு
பத்து நாள் பிடித்தது
உன்னையே நீ அழைத்து வரவில்லை
என்ற உண்மை பிடிபட....


Tuesday 14 July 2015

Hikoo- எல்லாம் பிடிக்கிறது



உன் காதல்
உன் பேச்சு
உன் அக்கறை
உன் கவனிப்பு
உன் நிதானம்
உன் திறமை
எல்லாவற்றிறுக்கும் மேலாக
தொலைதூரமாக இருந்து
நீ என்னைப்பார்ப்பதும் பார்க்காமல்
போல் நடிப்பது கூட.....

Popular Posts