மீண்டும் கல்லூரியில் ஓர் நாள்-I am sure you will smile and your brain will start think of your college Days..

கல்லூரி வாழ்க்கை முடிந்து ஆனது இரண்டு வருடம்.... மீண்டும் கல்லூரிக்கு ஒருநாள் சென்று வந்தேன்... கல்லூரியில் பல மாறுதல்கள் முதல் மாறுதல் மாணவனாய் சென்ற நான் அன்று பழைய மாணவனாய் அறிமுகம் செய்துகொண்டு உள்ளே சென்றேன்.... கல்லூரியின் படிக்கட்டுகளில் முன்னோக்கி ஏறினேன் என் கல்லூரி நாட்கள் பின்னோக்கி அழைத்தது.... அதே படிக்கட்டில் ஜூனியர் மாணவன் ஒருவனோடு கட்டிபுரண்டு சண்டையிட்டது படிக்கட்டின் படிகளில் அமர்ந்து அரட்டை அடித்து மாணவிகளை வம்பிகிளுத்ததாய் பல ஞாபகங்கள் என்னுள்.... தனிமை உணர்ந்ததில்லை நான் அன்று உணர்ந்தேன் என் நண்பர்கள் இல்லாத கல்லூரியில் நான் மட்டும் நடந்தபோது.... என் கண்கள் தேடிசென்று நின்றது எங்களது வகுப்பறையில் என்னை வரவேற்று கண்ணீர் சிந்துவது போல் உணர்தேன் என் இருப்பிடத்தை பார்த்தபோது.... மௌன மொழி பேசி எனது இருப்பிடம் என்னிடம் கேட்டது நீ மட்டும்தான் வந்தாயா என்று.... இதயம் கனத்தது என்னை அறியாமல் ஓர் வலி என்னில் தோன்ற என் சந்தோசத்தை மட்டுமே பா...