Monday, 25 November 2013

Mummy Enaku Oru Doubtu.. இதை படித்தால் சிரிக்காமல் இருக்கமாட்டீர்கள்

அப்பு என்ற 7 வயது சிறுவன் (உங்கள் வீட்டு வாண்டு மாதிரி) படுக்கையில் படுத்துக் கொண்டே தன் தாயிடம் பேசிக்கொண்டிருக்கிறான்.
 
 

இனி...
அப்பு : ஏன் அம்மா கொசு ராத்திரில மட்டும் நிறைய கடிக்கவருது....அது எப்ப அம்மா தூங்கும்? 
அம்மா : அது தூக்கம்  வரும்போது தூங்கும்...
அப்பு :எப்ப தூக்கம் வரும்மா? 
அம்மா :அது சாப்பிட்டவுடன் தூங்கும்... 
அப்பு :கொசுக்கு வீடு எங்கம்மா?
அம்மா :அதுக்கு வீடே இல்லை... 
அப்பு :ஏம்மா வீடே இல்லை? 
அம்மா :அது ரொம்ப சின்னதா இருக்க அதான் விடுஇல்ல... 
அப்பு :நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே எனக்கு விடு இருக்கே ..... 
அம்மா :இது அப்பா அம்மா உனக்கு கட்டி தந்தது... 
அப்பு :அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அம்மா.. 
அம்மா :அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு விடு இல்ல... 
அப்பு :கொசுவுக்கு கொசுன்னு யாரும்மா பேர் வைச்சது? 
அம்மா :கடவுள்... 
அப்பு :கடவுளைக் கொசு கடிக்குமா அம்மா ? 
அம்மா :கடிக்காது... 
அப்பு :ஏன்மா கடிக்காது? 
அம்மா :கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்... 
அப்பு :அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அம்மா ? 
அம்மா :வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு... 
அப்பு :கடவுள் நல்லவராம்மா? 
அம்மா :ரொம்ப நல்லவர்.... 
அப்பு :அப்புறம் ஏம்மா கொசுவை அடிக்கிறாரு? 
அம்மா :அது அப்படித்தான் நீ தூங்கு... 
அப்பு :கொசு ஏன்மா நம்மளைக் கடிக்குது? 
அம்மா :அதுக்கு பசிக்குது... 
அப்பு :கொசு இட்லி சாப்பிடுமா? 
அம்மா :அதெல்லாம் பிடிக்காது...
அப்பு :கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா? 
அம்மா :வாயை மூடிட்டு தூங்குடா அப்பு... 
அப்பு :ஒரே ஒரு கேள்வி மம்மி? 
அம்மா :கேட்டுத் தொலை.. 
அப்பு :கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்? 
அம்மா :அதுக்கு பல்லே இல்லை... 
அப்பு :பிறகு எப்படி கடிக்கும்? 
அம்மா :அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்...
அப்பு :பேயைக் கொசு கடிக்குமா மம்மி? 
அம்மா :அப்பு வாயை மூடிட்டு தூங்கு... 
அப்பு :நாம தூங்கும் போது வாயும் தூங்குமா மம்மி...? :-D 

Saturday, 23 November 2013

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.!!


நண்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்.” என நினைத்துக்கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டது போல் தூங்குகிறான் “ என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் . "காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால் தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கிவிட்டு சென்றார்.

கதையின் நீதி -நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.!!

Friday, 22 November 2013

ஆசைதான் எனக்கு !!!!!

மனைவியாய்
இறுதிவரை
ஒரு தோழியாய்
வரப்போகும்
அவள்
யார் என்று அறிய
ஆசை...
வாரம் ஒரு முறையாவது
அவளுக்கு
முன் எழுந்து
அவள் தூங்கும்
அழகை ரசிக்க
ஆசை...
தினமும் மலர் சூடி
அவள் நெற்றியில்
என்
இதழ் சேர்க்க
ஆசை....
அனைவரும் இருக்கும்
நேரத்தில்
கள்வனாய்
அவள் இடைக்கிள்ள
ஆசை...
யாரும் இல்லா நேரத்தில்
முத்தத்தில் அவளை
நனைக்க
ஆசை...

குழந்தையாய் அவள்
செய்யும் தவறுகளை
ரசிக்க
ஆசை....


யாரும் இல்லா
சாலையில்
அவள்
கைபிடித்து நடக்க
ஆசை.....
முதன் முதலில்
நான்
வாங்கும் வாகனத்தில்
அவளோடு
அமர்த்து வெகுதூரம்
செல்ல
ஆசை...
மழை நேரத்தில்
ஒரு குடைக்குள்
அவளுடன்
இருக்க
ஆசை....
மழையில் நனைந்த
என் தலையை
அவள்
புடவை நுனிகொண்டு
துடைக்க
ஆசை..
என் உயிர் சுமக்கும்
அவளை
அன்று
என் கண்ணுக்குள்
வைத்து பார்க்க
ஆசை...
என் உயிர் பிறந்த
பின்பும்
அவள்
முகம் முதல்
பார்க்க
ஆசை...
இப்படியே
60 ஆண்டு காலம்
அவளோடு
நான் வாழ
ஆசை...
60 ஆன பின்பும்
அவள் முகத்தில்
விழுந்த ரேகையும்
கன்னத்தில் விழுந்த
குளியையும்
மூக்கு கண்ணாடி
போட்டு ரசிக்க
ஆசை
அன்றும்
கோலுன்றி
அவள் நடவாமல்
என் தோல்
பிடித்து நடக்க
ஆசை...

இறக்கும்
நேரத்திலும்
அவள் மடியில்
என் தலை இருக்க
அவள் முகம் பார்த்து
புன்னகையுடன்
உயிர்பிரிய
ஆசை...!

Popular Posts