படித்ததில் பிடித்தது-நாய்க்குட்டிகள் விற்பனைக்கு
‘ நாய்க் குட்டிகள் விற்பனைக்கு ’ என்று எழுதிய பலகையை தனது கடைக் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர். அந்தப் பலகை குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர். அதன்படியே ஒரு சிறுவன், கடையின் முன் வந்து நின்றான். "நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான். "முப்பது டாலரிலிருந்து ஐம்பது டாலர் வரை" - கடைக்காரர் பதில் சொன்னார். அந்தக் குட்டிப் பையன் தனது பேண்ட் பைக்குள் கைவிட்டுக் கொஞ்சம் சில்லறைகளை எடுத்தான். "எங்கிட்ட 2.37 டாலர் இருக்கு. நான் நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?" என்று கேட்டான். கடை உரிமையாளர் புன்னகைத்து, உள் பக்கம் திரும்பி விசிலடித்தார். நாய்க் கூண்டிலிருந்து ஒரு பெண் இறங்கி நடைபாதை வழியாக ஓடி வந்தாள். அவளுக்குப் பின்னால், முடியாலான பந்துகளைப் போல ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகள் ஓடிவந்தன. ஒரு குட்டி மட்டும் மிகவும் பின்தங்கி மெதுவாக வந்தது. பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த அந்தக் குட்டியை உடனே கவனித்த சிறுவன், "என்னாச்சு அதுக்கு?" என்று கேட்டான். அந்தக் குட்டி ...