அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)
கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு
மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு
கனவுகள் காணு தூக்கம் கொண்டு
நடந்திடும் என்று நம்பி இன்று
[[முயற்சி திருவினை ஆக்கும்
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ அதோப்ப தில் .
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத கூலி தரும் ]]
விதைக்குள் தூங்கும் ஆலமரம்
கண்ணுக்கு தெரியாது
அது மரமாய் வளரும் காலம்வரும்
மண்ணுக்குள் உறங்காது
நீ தேடும் சிகரம் தூரமில்லை
நடப்பதை நிறுத்தாதே
பெரும் துளி தான் இங்கு கடலாகும்
நம்பிக்கை தொழைகாதே
மீண்டும் மீண்டும் பாதம் பட்டால்
பாறை கூட பாதை ஆகும்
முன்னால் வைத்த காலை நீயும்
பின்னால் எடுக்காதே
பூக்கள் பூக்க வேர்கள் தேவை
வெற்றிகிங்கே வேர்வை தேவை
உன் கைரேகை தேய்ந்தாலும்
உழைப்பதை நிறுத்தாதே
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)
உன்னால் என்ன முடியும் என்று
உன்னகே தெரியாது
உன் சக்தியை நீயும் புரிந்து
கொண்டால் சாதிக்க தடையேது
முயற்சிகள் செய்து தோற்பதேல்லாம்
தோல்விகள் கிடையாது
விழுந்து விடாமல் யாரும் இங்கே
எழுந்தது கிடையாது
இல்லை என்ற சொல்லை கூட
இல்லை என்று தூக்கிப் போடு
நாளை உன்னை மேலே ஏற்றும்
துணிச்சலை இழக்காதே
விழ்ந்தால் கூட பந்தாய் மாறு
வேகம் கொண்டு மேலே ஏறு
முந்திக் கொண்டு முன்னால் ஓடு
முயற்சியை நிறுத்தாதே
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)