Thursday, 13 June 2013

போதுமடி இந்த வலி, Pain ,Short story,Miss u


இரண்டு நாட்களுக்கு முன்னால் நண்பருடன்
மதுரை சென்றிருந்தேன் வேலை முடித்துவிட்டு
பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன்
எதிரே இருந்த திருமண மண்டபத்தில் மறுநாள் நடக்க இருந்த கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன
உன்னை பிரிந்த நாட்களில் இருந்து கல்யாணம் சம்பந்தமான எந்த ஒரு விஷயமும் எனை வாட்டி
வதைத்து கொண்டிருந்தன எனவே பார்வையை
வேறு பக்கம் திருப்பினேன் திரும்பிய பக்கத்தில்
அதே கல்யாணத்தின் போஸ்டர் அதில் மணமகளின்
பெயர் ....என்னவளின் பெயர் தான்
முகத்தில் ஒரு கலக்கம் ...கண்கள் தானாய் கலங்கின
செய்வதறியாது நின்றுகொண்டு இருந்தேன்
கண்களை மூடிக்கொண்டு சிறிதுநேரம் அமைதியாய் இருந்தேன் .....மறுபடியும் தயக்கத்தோடு போஸ்டரை
பார்த்தேன் பெயர்,படிப்பு எல்லாமே ஒன்றுதான்
initial மட்டும் மாற்றம்.....அவளது initial 'D'...
அங்கே initial 'B' என இருந்தது .....
.
.
போதுமடி இந்த வலி ....சில நொடிகள் உன் பெயரை இன்னொருவனோடு பார்த்ததற்கே எத்தனை வலிகள்
நீ இன்னொருவனோடு வாழ போகிறாய் ....எப்படி மனம்
பொறுத்துக்கொள்ள போகிறது ....
Via  Ungala Epadi Correct Panradhanu Sathyama Enaku therilanga

No comments:

Post a Comment

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts