Thursday, 1 September 2016

அவள்..

மழலையின் உருவமானாள்..!
குறும்புகளின் ஊற்றானாள்..!
மகிழ்ச்சிகளின் இருப்பிடமானாள்..!
எங்கள் வீட்டின் இளவரசியானாள்..!
பட்டாடையில் பேரழகியானாள்..!
நான் கதை சொல்லி உறங்க
வைக்கும் குழந்தையானாள்..!
என் கண்ணீரை மறைய
வைக்கும் மந்திரமானாள்..!
துள்ளித் துள்ளித் திரியும் மான்களானாள்..!
தலை கோதும் விரல்களானாள்..!
தாலாட்டி உறங்க வைக்கும் அன்னையானாள்..!
சண்டை போடும் குட்டி ராட்சசியானாள்..!
என் விரல் பிடித்து நடக்கும் உயிரானாள்..!
என்றும் எனக்காக துடிக்கும் இதயமானாள்..!
அவள்..
என் செல்ல தங்கையானாள்..!!

No comments:

Post a Comment

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts